மாலை ஷெராட்டன் ஹோட்டல் ஸ்விம்மிங் பூல் லாபியில் உட்கார்ந்து நீச்சலடிப்பவர்களை கண்காணித்துக்கொண்டிருந்த ஜாக்கியின் மொபைல் அழகாக சினுங்கியது.
‘ஜாக்கி ஹியர்..’ கம்பீரமாக சொன்னான்.
‘ஹேய் மேன்.. நான் குரோவர் பேசுறேன். என் வைஃப் சோனம்க்கு க்ளாஸ் எடுத்திட்டு இருக்கீங்களே…’
‘Yeah… Sonam is getting like a pro’
‘ஆமாம் நான் கூட கவனிச்சேன். இப்போ நிறைய நேரம் நீச்சல் அடிச்சிட்டு இருக்கா. சந்தோஷமா இருக்கா