சென்னை மாநகராட்சி அடையார் மண்டலத்தில் இருக்கும் ராஜா அண்ணாமலை புறம் கவுசிலர்தான் நம் நாயகி நீல வேணி. வேணி என்று தான் எல்லோரும் கூப்பிடுவார்கள்.
மந்தைவெளியில் ஒரு புறம்போக்கு நிலத்தை பிடித்து வீடு கட்டிக்கொண்டு சௌகர்யமாய் வாழ்கை நடத்துகிறாள். தன்னை தேடி வருபவர்களிடம் நன்கு காசை கறந்து விடுவாள். ஆனால் அவர்கள் கேக்கும் வேலையையும் பண்ணி கொடுத்து விடுவாள். அதனால் இவள் பேரில் மக்களுக்கு ஒரு நம்பிக்கை.