நகரத்தை விட்டு வெகுதூரத்தில் அமைந்திருந்த தொழிற்பேட்டையில், விசாலமான அந்த ஊழியர் குடியிருப்புப்பகுதியில்,அடர்த்தியான மரங்கள் தலையசைத்துக்கொண்டிருந்தன. அதே வளாகத்தில் சற்றே டாம்பீகமாக, அமைதியாக, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பில் இலைகள் சலசலப்பதைத் தவிர வேறு எந்த ஓசையும் கேட்கவில்லை.
சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருக்க, மெல்லிய நைட்டியணிந்தபடி மரநிழலில் நாற்காலியில்