சாரதாவுக்கு பெருமையாக இருந்தது. 45 வயதிலேயே அவள் பாட்டியாகி விட்டாள். அவளது மகள் மேகலைக்கு நேற்று தான் கல்யாணம் நடந்தது போல இருக்கிறது. ஆனால் ஒரு வருடம் 2ருண்டோடி அவளுக்கு தலைச்சன் குழந்தையும் பிறந்து விட்டது.
பத்து வருடங்களுக்கு முன் சாரதாவின் கணவன் அகால மரணம் அடைந்தபோது, மூன்று பெண் குழந்தைகளையும், இரண்டு ஆண் குழந்தைகளையும் எப்படி கரையேற்றப் போகிறோம் என்று அவள் இடிந்து போயிருந்தாள்.ஆனால்,